You are here
Home > அறிவியல் பிரச்சாரம் > வானில் இன்று சூரியன், புதன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ நிகழ்வு

வானில் இன்று சூரியன், புதன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ நிகழ்வு

சூரியன், புதன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ வானியல் நிகழ்வு (புதன் இடைமறிப்பு) திங்கள்கிழமை (மே 9) நடைபெறுகிறது.

இது ஒரு நூற்றாண்டில் 13-14 முறை நிகழ்கிறது. தற்போதைய புதன் கோள் இடைமறிப்பு நிகழ்வை பொதுமக்கள் காண தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டை கலீப் நகர் டிவிஎஸ் அப்பார்ட்மெண்டில் திங்கள்கிழமை மாலை 4.40 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச்செயலர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த புதன் இடைமறிப்பு, 2019 நவம்பர் 11-ல் நடக்கவுள்ளது. ஆனால் நாம் அதைப் பார்க்க முடியாது. வட அமெரிக்காவில் தெரியும்.

www.dinamani.com

Leave a Reply

Top