You are here
Home > இயக்கச் செய்திகள் > தரமான கல்வி சமமாக வழங்க வலியுறுத்தல்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

தரமான கல்வி சமமாக வழங்க வலியுறுத்தல்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தரமான கல்வி சமமாக வழங்க வேண்டுமன வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அந்த இயக்கத்தின் மாவட்டத் தலைவர் அ. மணவாளன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முற்றிலும் அரசின் செலவிலும்,பொறுப்பிலும் சமச்சீர் கல்வி முறையைக் கொண்டு வருவதே புதிய அரசின் கடமையாக இருக்க வேண்டும். தாய்மொழி வழி கல்வி பயின்றோருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகளே இல்லை என்ற நிலை உருவாக்க வேண்டும். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பான முறையில் கல்வி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்துதரப்பட வேண்டும். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்களுக்கான நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். மத்திய அரசு திட்டமிட்டுள்ள புதிய கல்விக்கொள்கை,21 ஆம் நூற்றாண்டின் சவால்களை சந்திக்கத் தக்கதாக அமைய வேண்டும் இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அனைத்து வேட்பாளருக்கும் நேரில் அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டச் செயலர் எம்.வீரமுத்து வரவேற்றார். தமிழக கல்வித் தர மேம்பாட்டுக்கான கோரிக்கைகளை மாநிலச்செயலர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் வெளியிட்டார். மாநில நிர்வாகி  எல்.பிரபாகரன் பெற்றுக்கொண்டார். மாவட்ட இணை செயலாளர்கள் இராமதிலகம், க.உஷாநந்தினி, டி.சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சி.சேதுராமன் அவர்கள் நன்றி கூறினார்.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top