You are here
Home > அறிவியல் பிரச்சாரம் > சூரியன், புதன், பூமி நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ நிகழ்வு இன்று மாலை பார்க்கலாம்

சூரியன், புதன், பூமி நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ நிகழ்வு இன்று மாலை பார்க்கலாம்

நாகர்கோவில் : தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் கணேசன் விடுத்துள்ள அறிக்கை: சூரியன், புதன் மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ நிகழ்வு இன்று (9ம் தேதி) நடக்கவுள்ளது. விண்வெளியில் இதுபோன்ற புதன் இடைமறிப்பு நிகழ்ச்சி கடந்த 2006ம் ஆண்டு நடந்தது. இனி 2019 நவம்பர் 11ம் தேதி இதுபோன்ற நிகழ்வு நடக்கவுள்ளது. பூமி, புதன் சூரியன் ஆகியவை 11 நாட்களுக்கு ஒரு முறை நேர்க்கோட்டில் சந்தித்தாலும், கோள் மறைவு ஏற்படுவதில்லை. பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து, புதன் ஏழு டிகிரி கோண சாய்வாக உள்ளது. புதனின் பாதை, பூமி வலம் வரும் தளத்தினை, இரண்டு புள்ளிகளில்தான் வெட்டும். அந்த புள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் அவை நேர்கோட்டில் சந்தித்தால் மட்டுமே புதன் இடைமறிப்பு ஏற்படும். இந்த நிகழ்வு இன்று மாலை 4.40 மணி முதல் 6.30 மணி வரை பார்க்கலாம். இந்த காட்சியை நேரடியாக வெறும் கண்ணால் பார்க்க கூடாது. டெலஸ்கோப், ஊசி துளை காமிரா, சூரிய ஒளி பிம்பம் எதிரொலிப்பு முலம் பிம்பத்தை திரையிட்டு காணலாம். பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கண்ணாடிகள், வெல்டிங் கிளாஸ் எண் 14 மூலமாகவும் காணலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினகரன் நாளிதழ்

Leave a Reply

Top