You are here
Home > அறிவியல் பிரச்சாரம் > சூரியனை புதன் கோள் கடந்து செல்லும் அரிய நிகழ்வு: இன்று காண ஏற்பாடு

சூரியனை புதன் கோள் கடந்து செல்லும் அரிய நிகழ்வு: இன்று காண ஏற்பாடு

சூரியனை, புதன் கோள் கடந்து செல்லும் அரிய நிகழ்வு திங்கள்கிழமை மாலை 4.30 முதல் நள்ளிரவு 12.32 வரை நடைபெறவுள்ளது. இதைப் பார்வையிட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து, அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சூரியனை புதன் கடந்து செல்லும் அரிய நிகழ்வு திங்கள்கிழமை மாலை 4.30 மணி முதல் நள்ளிரவு 12.32-க்குள் நடைபெறுகிறது. இது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும். மீண்டும் 2032-ஆம் ஆண்டில்தான் நடைபெறும். இந்த அரிய நிகழ்வை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈரோடு மாவட்டக் குழு மக்களுக்கு நிகழ்த்திக்காட்ட உள்ளது. ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வானியல் தொலைநோக்கி, ஊசிதுளை கேமரா மூலமாக பொதுமக்களுக்கு காண்பிக்கப்படவுள்ளது.

இதில், செங்குந்தர் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் சிவானந்தன், தலைமை ஆசிரியர் நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கவுள்ளனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் சோ.மோகனா புதன் இடை நகர்வு குறித்த அறிவியல் விளக்கத்தையும், சந்தேகங்களுக்கு விடையளிக்கவும் உள்ளார். ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் சக்கரவர்த்தி, முன்னாள் மாநிலத் தலைவர் பேராசிரியர் மணி, செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்வை, வெற்றுக் கண்ணால் பார்க்கக் கூடாது. புதன் இடைநகர்வினால் பூமி கோளுக்கோ மனிதன் உள்பட எந்த உயிரினத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. அனைத்து பொதுமக்களும் குழந்தைகளும், மாணவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இதுகுறித்து, கூடுதல் விவரம் அறிய 75982-25040, 84287-21296, 94438-14984 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top