You are here
Home > மாவட்ட நிகழ்வுகள் > இல்லந்தோறும் நூலகம் திட்டம்: நாகர்கோவிலில் 200 வீடுகளில் நூலகம்

இல்லந்தோறும் நூலகம் திட்டம்: நாகர்கோவிலில் 200 வீடுகளில் நூலகம்

இல்லந்தோறும் நூலகம் தொடங்கும் திட்டத்தின் கீழ் நாகர்கோவிலில் 200 வீடுகளில் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக புத்தகத் தினத்தை முன்னிட்டு வீடுகளில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் இல்லந்தோறும் நூலகம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் நாகர்கோவிலில் 200-க்கும் அதிகமான வீடுகளில் நூலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் கில்டா பாய், எட்வர்ட் ஜீனர் இல்லத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் நூலகத்தை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் பத்மதேவன், மாநிலச் செயலர் சசிகுமார், மாவட்ட இணைச் செயலர் சிவ ஸ்ரீ ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஞானதாஸ், ஜெனித், ஜோர்ஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top