You are here
Home > இயக்கச் செய்திகள் > புதுகையில் நூல் வெளியீட்டு விழா

புதுகையில் நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகத்தில், நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் அ. மணவாளன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கே. சதாசிவம் எழுதிய “மகிழ்வுடன் கற்றல்’ நூலை தமிழ்நாடு நேரு யுவகேந்திரா சங்கேதன் மண்டல இயக்குநர் எஸ். சதீஷ் வெளியிட்டார். முதல்பிரதியை தஞ்சை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கோ. ரெங்கநாதன் பெற்றுக்கொண்டார்.

புதுக்கோட்டை இடைநிலைக் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராசி. பன்னீர்செல்வம் நூல் மதிப்புரை வழங்கினார். இதைத் தொடர்ந்து, “மேன்மை’ மாத இதழை கவிஞர் தங்கம்மூர்த்தி அறிமுகம் செய்து பேசினார்.

இதில், தமிழ்நாடு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்க மாநிலத் தலைவர் இரா. ரவிச்சந்திரன், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. சுந்தரமகாலிங்கம், அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எம். வீரமுத்து, பேராவூரணி கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி. மீனாசுந்தரி, ஆசிரியர் ஆர். குமரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நூலாசிரியர் கே. சதாசிவம் ஏற்புரையாற்றினார். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர். ராஜ்குமார் வரவேற்றார். மேன்மை மாத இதழ் பதிப்பாளர் எம். மணி நன்றி கூறினார்.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top