You are here
Home > இயக்கச் செய்திகள் > நெய்வேலியில் உலக புத்தக தினம்

நெய்வேலியில் உலக புத்தக தினம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நெய்வேலி கிளை உலக புத்தகதினத்தை தமிழர் பண்பாட்டுக் கழகத்தில் நடத்தியது. உலக வரலாற்றில் நாடகத்துறையில் முத்திரை பதித்த கவிஞர் ஷேக்ஸ்பியரின் மறைந்த தினமான ஏப்ரல்,23-உலக புத்தக தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அதனை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட இவ்விழாவில் துணைத்தலைவர் இராணி வரவேற்புரை வழங்கினார். விழாவில் முன்னிலை வகித்த நெய்வேலி முன்னாள் நகர நிர்வாக இயக்குனர் ராமலிங்கம் கலந்து கொண்டு புத்தகவாசிப்பின் மகத்துவத்தை விளக்கினார். இவ்விழாவிற்கு தலைமையேற்ற முன்னாள் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் தமிழர் பண்பாட்டு கழகத் தலைவருமான டாக்டர் குழந்தைவேலு புத்தகம் ஒரு மனிதனின் சிறந்த நண்பன் என்று விளக்கிப் பேசினார்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் முன்னாள் பொதுமேலாளரும் மற்றும் பன்னாட்டு பயிற்சியாளருமான டாக்டர் DSC_2784ராஜீ அவர்கள் எழுதிய நோயற்ற வாழ்விற்கு நூறு வாழ்க்கை முறைகள் என்ற நூல் விழாத்தலைவரால் வெளியிடப்பட்டது. அதன் முதல்பிரதியை முன்னாள் நகரநிர்வாக இயக்குனர் ராமலிங்கம் பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஏற்புரை ஆற்றிய டாக்டர்.ராஜீ இந்த புத்தகத்தை மூன்றரை ஆண்டுகாலம் முயற்சி செய்து எழுதியுள்ளேன் என்றார். உடல்நலம், உள்ளநலம், குடும்பநலம் சேர்ந்ததே வாழ்ககைநலம் என்று விளக்கினார். இவ்விழாவினை ஒருங்கிணைத்து விழா ஏற்பாடுகளை துணைத்தலைவர் வாசன் மற்றும் துணைச்செயலாளர் பாலாஜி செய்திருந்தார்கள். இவ்விழாவில் நெய்வேலி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிர்வாகிகள் ராஜகோபாலன், செல்வராஜ், டென்னிஸ் பார்பரா, சாந்தி, இந்திரா, டாக்டர்நூருநிஷா, அனிதாசத்யம், ரவீந்திரன், பாலகுருநாதன் கலந்துகொண்டு நூலாசிரியரை வாழ்த்தினார்கள், மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் தாமோதரன், விக்டர்ஜெயசீலன், ஆன்ந்த்பிரசாத், உதயேந்திரன் கலந்து கொண்டனர். இறுதியாக கிளைச்செயலாளர் ஜேம்ஸ் நன்றியுரை கூறினார்.

செய்தி அனுப்பியவர்: ஜேம்ஸ்

peterjames.nlc@gmail.com

Leave a Reply

Top