You are here
Home > Article > மே 9 – புதன் இடை மறைப்பு: பேரா.  சோ.மோகனா

மே 9 – புதன் இடை மறைப்பு: பேரா.  சோ.மோகனா

நமது சூரிய குடும்பம் என்பது சுமார் 4.6 பில்லியன் /460 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது. எப்படி தெரியுமா? ஒரு பெரிய அசுரத்தனமான விண்மீன்களுக்கு இடையிலுள்ள மூலக்கூறு மேகங்களின் மோதுதலால் ஏற்பட்ட  ஈர்ப்பு விசை சிதறலால்  உருவானது. இதில் சூரிய குடும்பத்தின் பெரும்பகுதி நிறை என்பது சூரியன் மட்டுமே. மீதம் உள்ள குட்டியூண்டு பொருட்களே சூரியனைச் சுற்றும் 8 கோள்கள் ஆயின. இவற்றுள்  அதிக நிறையுள்ளது வியாழன் தான்.

எவ்வளவு தெரியுமா? சூரிய குடும்பத்தின் மொத்த எடையில் 0.002% மட்டுமே. இந்த 8 கோள்களில் சூரியனுக்கு அருகிலும்,  சிறியதாகவும்  உள்ள புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய். இவைகளை திடக் கோள்கள் அல்லது உட்கோள்கள் எனபப்டுகின்றன. ஏனெனில் இங்கே இவைகளில் பாறையும், imagesஉலோகமும் உள்ளன.   வெளியில் உள்ள 4 பெரிய கோள்களில் வியாழனும் சனியும் அசுரக் கோள்கள்/வாயுக் கோள்கள்  என்று அழைக்கப்படுகின்றன. இதில் ஹைடிரஜனும், ஹீலியமும் உள்ளன. கடைசி சுற்றில் உள்ளது யுரேனசும் நெப்டியூனும், ஐஸ் அசுரர்கள் என்று அழைக்கப்படுகின்றன.. இங்கே அம்மோனியா, மீதேன், மற்றும் நீர் காணப்படுன்றன.

நமது சூரிய மண்டலம் என்பது  பால்வழி மண்டலத்தின் ஒரு சிறு துகளே. நம் சூரிய குடும்பத்தில் உள்ள 8 கோள்களில் புதன் முதல் ரவுண்டில் உள்ளார். நம் பூமி அந்த சூரிய குடும்பத்தின் மூன்றாவது கோள் . எனவே நாம் மூன்றாவது  சுற்றில் இருக்கிறோம். சூரியனை முதல் சுற்றில்  சுற்றுவது அவரின் முதல் பிள்ளையான புதன் தான். இதுவே, சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய கோளும் கூட. அதுவே சூரியனுக்கு மிக அருகில் இருக்கிறது. அத்துடன் மிகவேகமாக, சூரியனை 87.969 நாட்களில் மற்ற கோள்களை விட அதிக வேகமாக சுற்றி வருபவரும்  அவரே. ஆனால் புதன் தன் அச்சில் தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுத்துகொள்ளும் கால அளவு 116 நாட்கள். மேலும் புதன் கோளுக்கு துணைக்கோள் (சந்திரன் ) ஏதும் இல்லை.

புதன் சூரியனை 2 முறை சுற்றி முடிக்கும்போது புதன்   தன் அச்சில் 3 முறை சுற்றி முடித்திருக்கும். 1965 வரை நாம் புதன் தனது ஒரு பக்கத்தை மட்டுமே  காட்டிக்கொண்டு சுற்றுவதாக எண்ணிக் கொண்டு இருந்தோம். ஆனால் அது அப்படியில்லை. ஒரு நூற்றாண்டில் புதன் கோள் , சூரிய முகத்துக்கு எதிரில் 13 முறை குறுக்கே ஓடிப் போய் விளையாடுகிறது. இதனைத்தான் அறிவியலாளர் புதன் இடைமறைப்பு என்றே அழைக்கின்றனர். அதன் ஒரு நாள் என்பது பூமியின் 58.5 நாட்களுக்கு சமமானது. புதன் மிக மிக மெதுவாக சுற்றுகிறது. நம்  பூமியைப் போல 38% ஈர்ப்புவிசை மட்டுமே இருக்கும்.

ரோமானியர்கள் புதனை, கடவுளின் தூதுவர்… வேகமாக ஓடும் தேவதை மெர்குரி என்று அழைத்தனர். ஆனால்  சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சுமேரியர்கள் தான் இதன் இருப்பைக் images (1)கண்டறிந்தனர். அப்போது இதனை அவர்கள்  நபு (Nabu ) எனப்படும் எழுத்துக் கடவுளுடன்  தொடர்பு படுத்தினர். மேலும் புதன் காலையில் மற்றும் மாலையில் மட்டும் காணப்படுவதால், இதற்கு வேறு பெயர்கள் கொண்டும் அழைத்தனர். ஆனாலும் கூட கிரேக்கர்கள் இரண்டும் ஒரே கோள்தான் என்பதையும் அறிந்திருந்தனர்.  ஹீராகிளிட்டஸ் (Heraclitus) என்ற  வானவியலாளர் புதனும், வெள்ளியுமே சூரியனைச் சுற்றி வருகின்றன. ஆனால் பூமி சுற்றவில்லை என்றே நம்பினார்.

புதனுக்கு பூமி போல  வளிமண்டலம் என்ற ஒன்று இல்லவே இல்லை. ஆனால் இது உருவான காலத்தில் வளிமண்டலம் இருந்தது. இப்போது மறைந்து காணாமல் போய்விட்டது என்பதும் கூட உண்மைதான். வளிமண்டலம் இல்லாததால், புதன் சூரியனிடமிருந்து கிடைக்கும் வெப்பத்தை தக்க வைக்க முடிவதில்லை. புதன் கோளின் மேற்புற பகல் இரவு  வெப்பம் மற்ற  கோள்களை விட அதிக மாற்றத்துக்கு உட்பட்டது. இதன் இரவு வெப்பம் (கடுங்குளிர்தான் ) -173டிகிரி செல்சியஸ். ஆனால் பகலில் சுட்டெரிக்கும் வெப்பம் 427 டிகிரி. அதன் துருவங்கள் எப்போதும் -93 டிகிரி வெப்பமே. அதன் சாய்மானமும் மிகவும் குறைவுதான். அதாவது 7 டிகிரி மட்டுமே.. இது நமது சந்திரன் போலவே ஏராளமான பள்ளங்களை / குழிவுகளைக்  கொண்டுள்ளது. புதன் சூரியனிலிருந்து சுமார் 46,000,000 முதல் 70,000,000கி.மீ தொலைவில்  உள்ளது.

பூமி சூரியனிலிருந்து மூன்றாவது சுற்றில் இருப்பதால், முதல் சுற்றில் உள்ள புதனும் இரண்டாவது சுற்றில் சுற்றி வரும் வெள்ளியும் அதனதன் சுற்றில் சுற்றி வரும்போது  சில சமயங்களில் சூரியன், பூமிக்கு இடையில் வரும். அப்போது அவை சூரியன், பூமி , புதன்/வெள்ளி  என மூன்றும் ஒரே நேர் கோட்டில் வர வாய்ப்பு உண்டு. அதாவது சூரிய கிரகணத்தில் சூரியன், பூமிக்கு இடையில் சந்திரன் வருவது போலவே நிகழ்வு.. ஆனால் இத்தனூண்டு குட்டியான புதன், சிறியதாக இருப்பதாலும், மிக அருகில் உள்ளதாலும், சூரியனை மறைக்க முடியாது.

எனவே அவர் , அதன் சுற்றில் சூரியனைச் சுற்றி வரும்போது  கண்ணாமூச்சி விளையாட்டுப்போல சூரியனுக்கு குறுக்கே குறுக்கு மூலை பாய்வார். குட்டியாய் புதன் கோள்  சூரியனைக் கடப்பதையும் கூட புதன் கிரகணம் என்றும் சொல்லலாம். ஆனால் புதன் சூரியனை மறைக்காததால், இந்நிகழ்வை  புதன் இடை மறைப்பு என்கிறோம். அப்போது புதன் சூரியனின் முகத்துக்கு நேரே   நகர்ந்து செல்லும்போது,  பொதுவாக சூரியப் புள்ளி நகர்வது போலவே சிறிய கருப்பு புள்ளியாகவே/கருப்பு மச்சம் போல்   தெரியும்.

downloadபுதன் கோள் சூரியனுக்கு அருகில் இருப்பதாலும், வெகு வேகமாகச் சுற்றுவதாலும், புதன் மறைப்பு என்பது , வெள்ளி மறைப்பை விட அடிக்கடி நிகழும். அதாவது ஒரு   நூற்றாண்டில்  13-14 முறை நிகழ்கிறது. அதுபோல ஒரு அற்புதமான புதன் மறைப்பு வானியல் நிகழ்வு , இந்த ஆண்டு, 2016, மே மாதம் 9 ம் நாள் நடக்க இருக்கிறது. இந்த 21ம் நூற்றாண்டில், இதற்கு முன்பு 2003 மற்றும் 2006ல் நடந்தது. அதற்கு முன் 1999 ல் நிகழ்ந்தது. பொதுவாக புதன் மறைப்பு என்பது, மே மற்றும் நவம்பர் மாதங்களில் மட்டுமே நிகழும். அதுவும் கூட மே மாதம், 8 ம் தேதிக்கு, சிலநாட்கள் முன்பின்னாகவும்,  நவம்பர் 10 ம் தேதிக்கு, சிலநாட்கள் முன்பின்னாகவும் நிகழும்.

ஆனால், நவம்பர் புதன் மறைப்பைப் போல அதில் பாதி மறைப்பு மே மாத மறைப்பு இருக்கும். நவம்பர் மாத புதன் மறைப்பு 7, 13 மற்றும் 33  ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும். ஆனால் மேமாதம்  வரும்  புதன் மறைப்பு நிகழ்வு 13 & 33 ஆண்டுகள்  இடைவெளியில் மட்டுமே வரும். மே மாத புதன் மறைப்பு அடிக்கடி நிகழாது. ஏனெனில், மே மாத புதன் மறைப்பின் போது   புதன், சூரியனிலிருந்து தொலை  தூரத்திலும் (aphelion), நவம்பர் மாத மறைப்பில், புதன் சூரியனுக்கு அருகாமையிலும் (perihelion) இருக்கும். எனவே அருகமை புதன் மறைப்பான நவம்பர் மாத புதன் மறைப்பு,  மே மாதத்தை விட  அடிக்கடி நிகழும் வாய்ய்பு உண்டு.

மேமாதத்தில் நிகழும் புதன் மறைப்பு என்பது, 12″ கோண விட்டத்திலும் (angular diameter), கீழ் நோக்கிய சாய்மான சந்திப்பிலும் ( descending node or south node), நவம்பர் மாத மறைப்பு 10″கோண விட்டத்திலும் (angular diameter) மேற்புறம் உள்ள சந்திப்பிலும் (ascending node or north node), நிகழும். மேலும் புதன் மறைப்பின் காலம்,  கடந்த 500 ஆண்டுகளில், கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிப் போய் இருக்கிறது.  அதாவது 1585 க்கு முன்பு இது ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் நிகழ்ந்தது.

இப்போது 2016, மே  9 ல், நிகழவுள்ள புதன் மறைப்பு என்பதில், புதன் பூமிக்கு அருகில் உள்ளது. எனவே புதன் கோள் கொஞ்சம் பெரிதாகத் தெரியும். ஆனாலும் கூட இந்நிகழ்வு என்பது பூமியிலிருந்து 84 மில்லியன் கி.மீ  தொலைவில்  இருக்கிறது. இதில் இந்த சின்ன புள்ளியான புதன், சுட்டெரிக்கும் சூரியன் முகத்துக்கு நேரே, சூரியவிட்டத்தில்  150ல் ஒரு பகுதி உள்ள( 1/150)புதன் ,12 ஆர்க் நொடியில் நகர உள்ளது.

imagesபுதன் மறைப்பின் போது புதன் சூரிய முகத்தில் அப்படியே நழுவி, நகர்ந்து செல்வது தெரியும். ஆனாலும், சின்ன சூரிய மச்சம் போல் தெரியும். குட்டி  புதனை,  சரியான கருவிகள் கொண்டு பெரிது படுத்திப் பார்த்தால், நகர்வு  இன்னும் சூப்பராக இருக்கும். ஆனால் இதனைப் பார்க்கும்போது, நல்ல சூரியக் கண்ணாடியைக் கொண்டு சூரியனைக் காணுவது நல்லது அல்லது சூரியனின் பிம்பத்தை தொலை நோக்கி மூலம், ஒரு பேப்பரில் பிடித்து காட்டுவது நல்லது. நேரடியாக பார்ப்பதோ, தொலைநோக்கி மூலம் நேராகப் பார்ப்பதோ கூடாது. இல்லையெனில் கண் பாதிப்புக்கு உள்ளாகும்.

புதன் மறைப்பு என்பதும் கூட சூரிய கிரகணம் போல, 5 கட்டங்களில் நிகழும்.  புதன் சூரியனை தொடும் நேரம். அடுத்து முழுமையாய் சூரியனுக்குள் நுழைந்துவிட்ட நேரம். மூன்றாவதாக புதன் அதிக பட்ச மறைப்பு, அதாவது கடக்கும் தூரத்தில் சரி பாதி தொலைவு, பின்னர், அதன் வெளியேறும்  பகுதி சூரியனின் மேற்பரப்பை தொடும் நேரம். கடைசியாக, புதன் சூரியத் தட்டிலிருந்து வெளியேறிய நேரம் என 5 படிகளில் நடக்கிறது.

Table 1: Geocentric Phases of the 2016 Transit of Mercury
Event Universal Time Position Angle
Contact I 11:12:19 83.2°
Contact II 11:15:31 83.5°
Greatest Transit 14:57:26 153.8°
Contact III 18:39:14 224.1°
Contact IV 18:42:26 224.4°

இம்முறை நிகழும் புதன் மறைப்பை பெரும்பாலும் இப்புவியில் உள்ள அனைவரும் காணலாம். அமெரிக்கா, அட்லாண்டிக் மற்றும் பசிபிக்  பெருங்கடல், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, பெரும்பான்மையான ஆசியாவின் பகுதிகளில் தெரியும். ஆனால் கிழக்கு ஆசியா, ஜப்பான், இந்தோனேஷியா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பகுதிகளில் தெரியாது.

மேற்குப் பகுதியில் வாழும்  அமெரிக்கர்களுக்கு, புதன் மறைப்பு சூரிய உதயத்துக்கு முன்னரே  துவங்கிவிடும். கிழக்கு ஐரோப்பா, ஆசியாமற்றும் ஆப்பிரிக்கா  பகுதிகளில், சூரியன் மறைந்த பின்னரே முடியும். வட அமெரிக்கா , தென்னமெரிக்கா,அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் வசிப்பவர்கள் புதன் மறைப்பை முழுமையாக காண முடியும்.

ஹாலி வால்நட்சத்திரம் கண்டுபிடித்த எட்மண்ட் ஹாலி தான், முதன் முதல் இந்த புதன் மற்றும் வெள்ளி மறைப்பின் மூலம், அந்த நேரத்தில் சூரியனின் தொலைவை, கணிதம் மூலம் கண்டறியலாம் என்ற உண்மையைக் கண்டுபிடித்தார். இங்கேதான் கெப்ளரின்  மூன்றாவது விதி மிகச் சரியாக செயல்படுகிறது. கடந்த நூறு  ஆண்டுகளில் . பூமி கண்டு கொண்ட புதன் மறிப்புக்கள் இதோ..

Table 4: Transits of Mercury: 2001-2100

Date

Universal Time Separation
2003 May 07 07:52 708″
2006 Nov 08 21:41 423″
2016 May 09 14:57 319″
2019 Nov 11 15:20 76″
2032 Nov 13 08:54 572″
2039 Nov 07 08:46 822″
2049 May 07 14:24 512″
2052 Nov 09 02:30 319″
2062 May 10 21:37 521″
2065 Nov 11 20:07 181″
2078 Nov 14 13:42 674″
2085 Nov 07 13:36 718″
2095 May 08 21:08 310″
2098 Nov 10 07:18 215″

 வெள்ளி இடைமறைப்பு குறைவாகவே நிகழ்கிறது. இதுவரை தொலை நோக்கி கண்டுபிடித்த பின்னர்,1631, 1639, 1761, 1769, 1874, 1882, 2004 and 2012 என  6 முறைதான் நிகழ்ந்துள்ளது.

அடுத்த புதன் மறைப்பு

அடுத்த புதன் இடைமறிப்பு 2019 ல் நடக்கும். ஆனால் நாம் பார்க்க முடியாது.  வடஅமெரிக்காவில் தெரியும். அதன் பின்னர்அமெரிக்கர்கள் அடுத்த  புதன் இடைமறைப்புக்கு  2049 வரை காத்திருக்க வேண்டும்.  இதற்கு இடையில் வரும் 2032, 2039 புதன் மறைப்பு வடஅமெரிக்காவில் தெரியாது.

இப்போது வரும் புதன் இடைமறிப்பு எங்கெங்கு தெரியும்.?

நமது மேக அண்ணாச்சி உதவி செய்து, சூரியனை மறைக்காமல் இருந்தால்,புதன் சூரியனின் ஓர் ஓரத்தில்transit-of-mercury-2016-anim-still ஓடி..விளையாடுவதை.  உலகின் பல பகுதிகளில் , அமெரிக்கா, கனடா, ஐரோப்பா,தென் அமெரிக்கா, அட்லாண்டிக்  ஆப்பிரிக்கா,மற்றும்  பெரும்பாலான ஆசியப் பகுதிகள்,பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிக் என்ற பெரும்பாலான பகுதிகளில்   இதனைப் பார்க்கலாம்.

அது சரி..நம்ம சென்னை மதுரையிலிருந்தும், அதன் சுற்றுப்புறங்களிலிருந்தும், எப்போது பார்க்கலாம்.?

புதன் இப்போது சூரியனைக் கடக்கும், அதன் முகத்தின் நேரே படுக்கை வசத்தில் இருக்கும். ஆனால் நாம் இதனைப் பார்க்கும் கோணத்தில், ஒரு லேசான வளைவில்  தெரியும்.

ஆனால், நீங்கள் பூமியிலிருந்து  பார்க்கும் இடத்தைப் பொறுத்து இதில் கோணமாற்றம் இருக்கும்.

Event UTC Time Time in Madurai*
First location to see the partial transit begin 9 May, 11:10:25 9 May, 16:40:25
Geocentric** partial transit begins (ingress, exterior contact) 9 May, 11:12:18 9 May, 16:42:18
First location to see the full transit begin 9 May, 11:13:37 9 May, 16:43:37
Geocentric** full transit begins (ingress, interior contact) 9 May, 11:15:30 9 May, 16:45:30
Mercury is closest to the Sun’s center 9 May, 14:57:25 9 May, 20:27:25
Geocentric** full transit ends (egress, interior contact) 9 May, 18:39:12 10 May, 00:09:12
Last location to see full transit end 9 May, 18:41:05 10 May, 00:11:05
Geocentric** transit ends (egress, exterior contact) 9 May, 18:42:24 10 May, 00:12:24
Last location to see partial transit end 9 May, 18:44:17 10 May, 00:14:17

பூமியின் மையப்பகுதிதான் Geocentric  பகுதி என்பது, இங்கே  7 மணி நேரம் 30 நிமிடங்கள், 6 நொடிகள் புதன் மறைப்பு தெரியும்

இதுதான், இந்த நூற்றாண்டில், வரும்  மிக்க நீண்ட  புதன்  மறைப்பு ஆகும். அதாவது 7 மணி நேரம் 30 நிமிடங்கள், 6 நொடிகள். இதற்கு முன் நிகழ்ந்த நீண்ட புதன் மறைப்பு1970 மே ..இனி வரப்போகும் நீண்ட புதன் மறைப்பு 2095 மே  மாதம் நிகழும்.

சென்னை ,மதுரை அதன் சுற்றுப் புறங்களில் பார்க்கும் நேரம் எது?

மாலை 4.40 மணியிலிருந்து மறையும் நேரம் வரை..6.29 வரை பார்க்கலாம். சுமார் 1 மணி நேரம் 49 நிமிடங்கள் பார்க்கலாம்.

Leave a Reply

Top