You are here
Home > இயக்கச் செய்திகள் > செல்லம்மாள் காலனி பள்ளியில் உலக சுகாதார தினம்

செல்லம்மாள் காலனி பள்ளியில் உலக சுகாதார தினம்

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு (ஏப்ரல் 7) தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்ட மையம் சார்பாக செல்லம்மாள் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியர் வே.நாகராஜ் கணேஷ் குமார் தலைமையில் அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி தன் சுத்தம் பேணுவதின் அவசியம் பற்றியும் அறிவியல் கண்ணாபூச்சி ஆகிய நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு செய்துகாட்டினார்.

தன் சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றி மாணவர்களிடையே உரையாடல் மூலமாக பல உறுதிமொழிகளை எடுத்தார். மாணவர்களுக்கு தேவையற்ற காகிதங்களிலிருந்து காகித பூ, காகித தொப்பி மற்றும் காகித பொம்மைகள் ஆகியவை செய்து காட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியிலுள்ள அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நன்றி: தீக்கதிர் நாளிதழ்

Leave a Reply

Top