You are here
Home > இயக்கச் செய்திகள் > நெய்வேலி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மகளிர் தின விழா

நெய்வேலி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மகளிர் தின விழா

அறிவியல் இயக்கம் சமம் கடலூர் மாவட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,  சமம் உபகுழுவின் சார்பில் மகளிர் தின விழா வட்டம்-19 ல் உள்ள தமிழர் பண்பாட்டுக் கழகத்தில் ஞாயிறன்று நடந்தது. இதில் ஒரு பகுதியாக மகளிர்க்கான தனித்திறன் விளையாட்டுக் போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவிற்கு மா.இராணி முன்னிலை வகித்தார். சமம் ஒருங்கிணைப்பாளர் டென்னிஸ் பார்பரா வரவேற்புரை வழங்கினார். செயலாளர் இந்திரா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தனித்திறன் போட்டிகளை சாந்தி, டாக்டர் நூருநிஷா மற்றும் தாமரைச்செல்வி நடத்தினார்கள்.

தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் Ln G.K. வெண்ணிலா கலைச்செல்வன் அவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அவர்தம் கலந்துரையாடல் உரையில் தற்பொழுது பெண்களுக்குரிய பிரச்சினைகள் குறித்தும் அதை எப்படி அணுகி தீர்ப்பது என்பது குறித்தும் விளக்கினார். பிள்ளைகளை வளர்ப்பது, குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குவது மற்றும் குடும்பத்தில் கணவன் – மனைவி இணங்கி இருப்பது எப்படி என்று பல விளக்கங்கள் அளித்தார். எழுபதுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். செயற்குழு உறுப்பினர்கள் கெளரி, உஷா, ஜெயா, ஆனந்தஜோதி, சுப்புலட்சுமி, மலர்விழி, உமாராணி, வி.மலர்விழி மற்றும் ராஜேஸ்வரி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்தனர்.

முன்னதாக சமம் பேரவைக்கூட்டம் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்காலத் திட்டம் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனிதா சத்யம் புகைப்படங்கள் எடுத்தார். இறுதியாக தாமரைச்செல்வி அவர்கள் நன்றியுரை வழங்கினார். விழா முடிந்ததும் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

நன்றி:  P ஜேம்ஸ்,    செயலாளர்

Leave a Reply

Top