You are here
Home > இயக்கச் செய்திகள் > தி. மலை மாவட்ட ஆரணி கிளையில் TTT சான்றிதழ் வழங்கும் விழா

தி. மலை மாவட்ட ஆரணி கிளையில் TTT சான்றிதழ் வழங்கும் விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி கிளையில் துளிர் திறனறிதல் தேர்வு எழுதிய 455 மாணவக் கண்மணிகளுக்கு பாராட்டு விழா நடத்தப் பட்டது. இவ்விழாவில் 30 பள்ளிகளைச் சேர்ந்த 400 மாணவர்களும், 50 பெற்றோர்களும், 25 ஆசிரியர்களும், 50 அறிவியல் இயக்க ஆர்வலர்களும் பங்கேற்றனர்.

பள்ளி அளவில், ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மா​நில அளவில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவியரைப் பாராட்டி அறிவியல் வெளியீடு புத்தகங்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌவரவிக்கப் பட்டார்கள். நிகழ்ச்சியில் கண்ணா மூச்சி விளையாட்டு, கைத்தட்டு விளையாட்டு, பாடல், காரண-காரியம் கண்டறி போன்ற விளையாட்டுக்கள் நடத்தப் பட்டன.
 
காத்தவராயன்
மாவட்டச் செயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
திருவண்ணாமலை மாவட்டம்
katha67@gmail.com

Leave a Reply

Top