You are here
Home > இயக்கச் செய்திகள் > அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காகித வடிவமைப்புப் பயிற்சி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காகித வடிவமைப்புப் பயிற்சி

அவிநாசி அருகே உள்ள சாலைப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காகித வடிவமைப்புப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மல்லிகா தலைமை வகித்தார்.

இதுகுறித்து, பயிற்சியாளரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட வளர்ச்சி உப குழு ஒருகிணைப்பாளருமான ஈஸ்வரன் கூறியதாவது: ஓரிகாமி எனும் ஜப்பானிய காகித வடிவமைப்புக் கலைப் பயிற்சி, பள்ளி மாணவர்களுக்கு நினைவாற்றல், உருவாக்கும் திறன், மனதை ஒரு நிலைப்படுத்தல் உள்ளிட்ட ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் என்றார்.

இப்பயிற்சியில், காகிதப் பூ, கப்பல், பல்வேறு வகையான தொப்பிகள், மயில், கொக்கு உள்ளிட்டவைகளை வடிவமைப்பது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. இதில், 4-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர்கள் கி.சத்யபிரியா, லீபா, வனஜா உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top