தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவர் பேராசிரியர் மோகனா அவர்கள் நேற்று கொமரலிங்கம் சென்று கவுசல்யாவையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து வந்தார்.

நாளை மறுதினம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச்செயலாளர் சாமுவேல்ராஜ் மீண்டும் செல்கிறார்.திருப்பூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் சசிகலா தலைமையில் ஒரு பெண்கள் குழு வாரம் இருமுறை கவுசல்யாவைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாதர் சங்க கோவை மாவட்ட்ச் செயலாளர் தோழர் ராதிகா கவுசல்யாவை தன் வீட்டில் வந்து இருந்து சில காலம் தங்கி உடம்பைக்கவனித்துக்கொண்டு செல்ல அழைத்துள்ளார்.

கழிப்பறை வசதி கூட இல்லாத வீட்டில் காவல்துறையின் பாதுகாப்புடன் காதல் மணம் புரிந்த சங்கரின் நினைவுகளுடன் கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கும் கவுசல்யாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தேற்றி அவரைப் படிக்க வைத்துப் புது வாழ்வுக்கு அழைத்து வர நம் எல்ல்லோருக்கும் பங்கு இருக்கிறது.மாதர் சங்கத்தின் முயற்சிகளுக்கு தேவைப்படும் உதவிகள் செய்து துணை நிற்போம்.

thanks: newtamils.com

Leave a Reply

Top