You are here
Home > இயக்கச் செய்திகள் > நீர்நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படாததே தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம்

நீர்நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படாததே தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம்

நீர்நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படாததே தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் என்றார் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர் ஆர். ராஜ்குமார்.

புதுகை சந்தைப்பேட்டை நகராட்சி தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய உலக தண்ணீர் தினக் கருத்தரங்கில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:

இன்று தண்ணீர் பற்றாக்குறையும்,வறட்சியும் ஏற்பட்டதற்கு கடந்த காலங்களில் நீர்நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படாததே காரணம். ஒரு நபர் ஒரு நாளைக்கு 200 லிட்டர் தண்ணீர் செலவழிக்கிறார். ஒரு சொட்டு தண்ணீர் வீணாவதைக் கூட அவமானமாகக் கருத வேண்டும். உலகில் பல நாடுகள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமது நாட்டில் தண்ணீர் இருந்தும் வறட்சியால் வாடிக் கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம் முறையான பராமரிப்பு இல்லாததே காரணம். நாட்டில் தண்ணீரை காசு கொடுத்து வாங்குவது வேதனையானது என்றார்.

பள்ளி மாணவர்களுக்கு தண்ணீர் தினத்தையொட்டி ஓவியப் போட்டி நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உலக தண்ணீர் தினம் குறித்த கைப்பிரதி வெளியிடப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியர் எஸ். விஜயமாணிக்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் அ. மணவாளன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.எஸ். சிவராம கிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலாளர் எம். குமரேசன், இராமதிலகம் வாழ்த்தினர். மாவட்டத் துணைத் தலைவர் கா. ஜெயபாலன் வரவேற்றார். ஆராய்ச்சி நிறுவன இணைத் திட்ட அலுவலர் அ. முகமது பிலால் நன்றி கூறினார்.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top