You are here
Home > இயக்கச் செய்திகள் > தென்காசியில் மகளிர் தின விழிப்புணர்வு பேரணி

தென்காசியில் மகளிர் தின விழிப்புணர்வு பேரணி

தென்காசி, : தென்காசியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆய்க்குடி ஜெ.பீ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெண்கள் மையம், நாட்டு நலப்பணித்திட்டம்,  தமிழ்நாடு அறிவியல் இயக்கம், குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்கம் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி இணைந்து கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தென்காசி காசிவிசுவநாதர் கோயில் முன்பு நடந்த பேரணிக்கு ஜெ.பீ.கல்வி குழுமங்களின் நிர்வாகி பிரான்சிஸ்கா தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர்கள் ரஞ்சித்சிங், ஞானதுரை, ஜான்கென்னடி முன்னிலை வகித்தனர். கணிணி துறை தலைவர் மீனாட்சி வரவேற்றார். யூனியன் துணைத்தலைவர் சுப்பிரமணியன், வக்கீல்கள் வனஜா, திருமால்டிவு, தாஹிராள்பேகம், ரெட்கிராஸ் செயலாளர் சுப்பிரமணியன், குற்றாலம் மெட்ரோ ரோட்டரி தலைவர் மாடசாமிஜோதிடர், முருகன்ராஜ், மாரிமுத்து, ராமகிருஷ்ணன், ஜெயச்சந்திரன், ஜெ.பீ.கல்லூரி மேலாளர் ரித்திஸ், லிஸா, மெர்சி, சோபியா, பேராசியை செல்வகோமதி உட்பட ஜெ.பி.கலை கல்லூரி, பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகயை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்து பெண்கல்வி, பெண் சம அந்தஸ்து பற்றி உறுதிதொழிகளை எடுத்துக்கொண்டனர். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். முன்னதாக தாமிரபரணி கலைக்குழு சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

நன்றி: தினகரன் நாளிதழ்

Leave a Reply

Top