You are here
Home > அறிவிப்புகள் > நாளை சூரிய கிரகணம்: 27 நிமிடங்கள் பார்க்கலாம்

நாளை சூரிய கிரகணம்: 27 நிமிடங்கள் பார்க்கலாம்

வரும் புதன்கிழமை (மார்ச்9) காலை 6.20-க்கு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இக் கிரகணம் 27 நிமிடங்கள் வரை நீடிக்கும் என, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் என்.சுரேந்தர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது: தமிழகத்தில் இக் கிரகணத்தை சூரியன் முன்பாதி உதித்தபின் காலை 6.21 மணியிலிருந்து 6.48 வரை சுமார் 27 நிமிடங்கள் வரை இதைப் பார்க்கலாம். நிலவு சூரிய தட்டின் முன்பாக தென் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. எனவே, சூரிய கிரகணத்தை கிழக்கு – தென் கிழக்குப் பகுதியில் பார்க்கலாம்.

சூரிய உதய நேரம் என்பதால் வெறும் கண்களால் சிறிது நேரம் விட்டுவிட்டுக் காணலாம். சூரிய ஒளியால் கண்கள் கூசினால் நேரடியாகக் கிரகணத்தைக் காண முயற்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். எக்ஸ்ரே புகைப்படம் இருந்தால் அதன் கருமையான பகுதியின் வழியாக கிரகணத்தைக் காணலாம். அதிகாலையில் அடிவானத்தின் அருகே மேகம் அல்லது பனிமூட்டம் இருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் கிரகணத்தை காணும் வாய்ப்பு குறையலாம். மேலும், கிரகணம் முடியும் நேரத்தில் சூரியன் அடிவானிலிருந்து வெறும் 6 டிகிரி உயரத்தில்தான் இருக்கும்.

சூர்ய கிரகணம் இயற்கையான நிகழ்வு. கிரகணம் குறித்த மூட நம்பிக்கைகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top