You are here
Home > இயக்கச் செய்திகள் > பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

காரைக்குடி அருகே திருமயம் அடுத்துள்ள மௌன்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில், தேசிய அறிவியல் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் வீரமுத்து வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் மணவாளன் தலைமை வகித்துப் பேசினார்.   இதில், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை, கவிதை உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

பரிசு வழங்கப்பட்டன. மௌன்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயபாரதன் செல்லையா, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில், மௌன்ட் சீயோன் கல்லூரி இயக்குநர் ஜெய்சன், துணைத் தலைவர் பிளா ரன்ஸ், ஒருங்கிணைப்பாளர் விவியன் ஜெய்சன், கல்லூரி முதல்வர் பாலமுருகன், சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் பீர்முகமது, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட அறியில் இயக்கக் கல்வி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்ட அறிவியல் இயக்க உதவி அமைப்பாளர் ராதிகாராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நன்றி:தினமணி நாளிதழ்

Leave a Reply

Top