You are here
Home > இயக்கச் செய்திகள் > சத்திரக்குடியில் தேசிய அறிவியல் தின விழா

சத்திரக்குடியில் தேசிய அறிவியல் தின விழா

ராமநாதபுரம் அருகேயுள்ள சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போகலூர் ஒன்றியத்தின் சார்பில், தேசிய அறிவியல் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, அறிவியல் இயக்க போகலூர் ஒன்றியத் தலைவர் கோ. குமரேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கு. காந்தி, பள்ளித் தலைமை ஆசிரியர் ஞானம்மாள், அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் இ. பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலர் அ. கிளமென்ட் வரவேற்றார்.

போகலூர் வட்டார மேற்பார்வையாளர் ஜெயக்குமார் விழாவை தொடக்கி வைத்துப் பேசினார். விழாவில், போகலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, அறிவியல் சம்பந்தமான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற 36 பேருக்கு உதவிக் கல்வி அலுவலர் தேன்மொழி, அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்க தேசிய துணைத் தலைவர் பேராசிரியர் பி. ராஜமாணிக்கம் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பேசினர். இதில், அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் எம். ஜான்கென்னடி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கணேசன் உள்பட பலரும் கலந்துகொண்டனர். ஆசிரியர் ரூபன் நன்றி கூறினார்

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top