You are here
Home > இயக்கச் செய்திகள் > அரசு பள்ளிகளில் தேசிய அறிவியல் தின விழா

அரசு பள்ளிகளில் தேசிய அறிவியல் தின விழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டக் கிளை சார்பில் கரூர் நகராட்சி குமரன் நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

கரூர் நகராட்சி குமரன் நடுநிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற தேசிய அறிவியல் தினவிழா சர்.சி.வி. ராமன் தினமாக கொண்டாடப்பட்டது.  விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் (பொ) வி. ஆரோக்கிய பிரேம்குமார் தலைமை வகித்தார். விழாவை மாவட்டச் செயலாளர் ஐ. ஜான்பாட்சா தொடக்கி வைத்துப் பேசினார். மாநிலச் செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் ஜி. ராமசந்திரன் நன்றி கூறினார். சர்.சி.வி. ராமன் முகமூடி அணிந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இப்பள்ளியில் துளிர் இல்லம் தொடங்கப்பட்டது.

இதேபோல கரூர் கொளந்தாகவுண்டனூரில் உள்ள தேவி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ. ராஜா தலைமை வகித்தார். பள்ளியின் செயலர் வெ. காமராஜ், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இப்பள்ளியிலும் சர்.சி.வி. ராமன் முகமூடி அணிந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top