You are here
Home > இயக்கச் செய்திகள் > வானூர் கிளையின் தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்.

வானூர் கிளையின் தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்.

அறிவியல் தினம்

விழுப்புரம்  மாவட்டம் வானூர் வட்டம்  டி. பரங்கனி ஊ,ஒ.நடுனிலைப்ள்ளியில்  தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  ஏற்பாடு செய்த குழந்தைகள் அறிவியல் திருவிழா  நிகழ்ச்சி நடைபெற்றது.   இந்நிகழ்வில்  மாணவர்களின்  அறிவியல் சோதனைகள்,  மாணவர்களுக்கான  எளிய அறிவியல் பரிசோதனைகளை    தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் திரு. காத்தவராயன்  செய்துகாட்டினார். அதனைத்தொடர்ந்து  மாணவர்கள்  பொதுமக்களை,   மாலை நடைபெரக்கூடிய  மந்திரமா ?தந்திரமா ? பொதுமக்களுக்கான  அறிவியல் விழிப்புணர்வு  நிகழ்ச்சிக்கு வரவேற்க  ஊர்வலமாக சென்று  அறிவிப்பு செய்து வரவேற்றனர்.

IMG_0317

மாலை மந்திரமா ? தந்திரமா ? இகழ்ச்சியை  தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலர்  திரு. முனைவர். சேதுராமன் அவர்கள்  நிகழ்த்தினார்கள் . இதில் மாணவர்களும் பொதுமக்களும் பெரும்திரளாக கலந்துகொண்டனர். அறிவியல் தொடர்பான சிந்தனைகள் மாணவர்களிடம் கலந்துரையாடப்பட்டது. இப்பள்ளியிலிருந்து  தேசிய அளவில் அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்ட  மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

IMG_0283

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்  மரியஅந்தோணி அவர்கள் தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியர் ஜெயவேல் வரவேற்றார் , தமிழாசிரியர் சுமதி, சமூகவியல் ஆசிரியர் கலையரசி, ஆசிரியர்கள்  விஜயகுமார், ரேவதி, கற்கும்பாரதம் ஆசிரியர் ஜெயந்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருப்பாளர் அருள், ஆரோவில் தாவரவியல் பூங்கா ஆசிரியர் சத்த்யமுர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.. இந்நிகழ்ச்சியை   தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர்  ஆசிரியர் இளங்கோவன்  எற்பாடு செய்து ஒருங்கிணைத்தார். இரவு 8.30 மணியளவில் நகழ்ச்சி நிறைவுபெற்றது.

Leave a Reply

Top