You are here
Home > இயக்கச் செய்திகள் > நெய்வேலியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்

நெய்வேலியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்

தேசிய அறிவியல் தினத்தில் (பிப்ரவரி – 28), வட்டம் – 9 ல் அமைந்துள்ள என்.எல்.சி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நெய்வேலி கிளை சார்பில், தேசிய அறிவியல் தினம் – 2016  போட்டிகளின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ – மாணவியர்களின் அறிவியல் மாதிரிகள் மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கலைவாணி அவர்கள் தலைமை வகித்தார். கிளை செயலாளர் P ஜேம்ஸ் வரவேற்று பேசினார். புரவலர் P.P ரவீந்திரன், பாலகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய அறிவியல் தின உறுதி மொழியை டாக்டர்.நூர்நிஷா வாசித்தார். நெய்வேலியைச் சுற்றியுள்ள பள்ளிகளில் இருந்து வந்திருந்த அறிவியல் கண்காட்சி பொருள்களை பார்வைக்கு வைத்து போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த அறிவியல் கண்காட்சியை என்.எல்.சி மக்கள் தொடர்புத்துறையின் முதன்மை பொது மேலாளர் திரு. ஸ்ரீதர் அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் உரையில் மாணவர்களின் படைப்புத்திறனை இத்தகைய கண்காட்சி தூண்டி வளர்க்கிறது என்று கூறினார்.

அறிவியல் வினாடி-வினா இறுதிச் சுற்றுப் போட்டியை தலைவர் ராஜகோபால், கஜேந்திரன் மற்றும் இணைச்செயலாளர் சின்னப்பராஜ் இணைந்து நடத்தினர். கண்காட்சியில் துணைத் தலைவர் ராணி, பேராசிரியர் ராஜசேகர், பேராசிரியர் சுதா ஆகியோர் சிறந்த குழுக்களைத் தேர்வு செய்தனர். மாவட்டத் தலைவர் தாமோதரன் மற்றும் செல்வின்ராஜ் வாழ்த்துரை வழங்கினர். S.S. வாசன் அவர்கள் நன்றி கூறினார்.

தகவல்:P ஜேம்ஸ், செயலாளர்.

Leave a Reply

Top