You are here
Home > அறிவியல் கல்வி > திருப்பூரில் டார்வின் தின நிகழ்ச்சிகள்

திருப்பூரில் டார்வின் தின நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டு தொறும் பிப்ரவரி 12 தேதியில் சார்லஸ் டார்வின் பிறந்த நாளை மிகச்சிறப்பாக அவரின் கொள்கைகளை மாணவர்களிடை கொண்டு சேர்த்து வருகிறது.

            இந்த ஆண்டும் “மனிதன் பரிணமித்த கதை” என்ற தலைப்பில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி –ஈ.பி.காலனி, சாமண்டிபுரம், கே.பி.கே நேஷ்னல் மெட்ரிக் பள்ளி, அமுதா மழலையர் பள்ளி மற்றும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இரங்கநாதபுரம் – சிறுபுலுபட்டி பிரிவு ஆகிய பள்ளிகளில் டார்வின் கோட்பாடுகள் மிக எளிய முறையில் சிறுசிறு திரைப்படங்கள் மூலமும் பிபிடி மற்றும் விளக்கப்படங்கள் மூலமாக மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. சிறு நாடகமும் இயற்கை தேர்வு குறித்த சிறு விளையாட்டும் மாணவர்களை கொண்டு நிகழ்த்தப்பட்டது. 300 மேற்பட்ட மாணவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

             “ஒரு நிமிட கதை” என்ற திரைப்படம் மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. திரு.உமாசங்கர் மாவட்ட பொருளாளர் மற்றும் திரு இராமமூர்த்தி மாவட்டச்செயலாளர் கருத்தாளர்களாக  கலந்துகொண்டனர். திரு. பாலு வேலம்பாளைய கிளை ஒருங்கிணைப்பாளர் மற்றும் திரு.ராம்குமார் திருப்பூர் கிளைச்செயலாளர் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

            மேலும் பல பள்ளிகளில் டார்வின் பரிணாமக் கோட்பாடு பற்றிய நிகழ்ச்சிகள்  நடத்திட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டக்குழு நடத்த திட்டமிட்டுள்ளது.

என்றும் அறிவியல் பணியில்

வி.ராமமூர்த்தி, மாவட்டச்செயலாளர்,

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

Leave a Reply

Top