You are here
Home > அறிவியல் கல்வி > கலிலியோ பிறந்த நாள்: அறிவியல் கொண்டாட்டம்

கலிலியோ பிறந்த நாள்: அறிவியல் கொண்டாட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் கிளை வானியல் அறிஞரும் நவீன அறிவியலின் முன்னோடியுமான கலிலியோ  கலீலீயில் பிறந்த தினத்தை (பிப் 15) முன்னிட்டு மாணவர்களிடையே அறிவியல் பார்வை மற்றும் அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் வண்ணம் “எளிய அறிவியல் பரிசோதனைகள்” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

“அறிவியல் பார்வையும் – அறிவியல் உண்மையும்” என்ற தலைப்பில் திரு. உமாசங்கர் ,மாவட்டப்பொருளாளர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அனுப்பர்பாளையம் புதூர் பள்ளி மாணவர்களுக்கு எளிய செயல்பாடுகள் செய்தும் குறும்படங்கள் மூலமாகவும்  டார்வின் பிரிணாமக்கொள்கை மற்றும் பிரபஞ்சம் உருவான விதம் குறித்து மாணவர்களிடையே விளக்கினார்.

“எளிய அறிவியல் பரிசோதனை” என்ற தலைப்பில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி –பண்டியநகர், அமுதா மழலையர் பள்ளி மற்றும் கலிலியோ துளிர் இல்லம் ஆகிய இடங்களில் திரு. தியாகராஜன் மாநில கருத்தாளார் அவர்கள் மிக எளிய முறையில் சிறுசிறு பரிசோதனைகள் மூலமும் பிபிடி மற்றும் விளக்கப்படங்கள் மூலமாக மாணவர்களுக்கு  அறிவியல் சோதனைகளை செய்துகாட்டினார்.

அறிவியல் சோதனைகள் செய்ய பெரிய ஆய்வகங்கள் தேவையில்லை, வகுப்பறையிலே தேவையற்ற பொருட்கள் மற்றும் விலை குறைந்த பொருட்களை கொண்டே பல இயற்பியல் மற்றும் வேதியியல் சோதனைகளை செய்ய முடியும் என்று கூறினார். மாணவர்களே அறிவியல் சோதனைகளை செய்து பார்த்தனர்.

இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு அறிவியல் இயக்க திருப்பூர் கிளைப் பொறுப்பாளர் திரு.ராம்குமார்  மற்றும் திரு.ரவிவர்மா ஏற்பாடு செய்தனர்.

வி.ராமமூர்த்தி,

மாவட்டச்செயலாளர் -தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

திருப்பூர் மாவட்டம்

Leave a Reply

Top