You are here
Home > இயக்கச் செய்திகள் > கலிலியோ பிறந்த தினம்

கலிலியோ பிறந்த தினம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், வானியல் அறிஞர் கலிலியோ பிறந்த தினம், அனுப்பர்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. மாணவர்கள் இடையே அறிவியல் பார்வை, மனப்பான்மையை வளர்க்கும் விதமாக, “எளிய அறிவியல் பரிசோதனை’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. “அறிவியல் பார்வையும், உண்மையும்’ என்ற தலைப்பில், மாவட்ட பொருளாளர் உமாசங்கர் பேசினார்.

பாண்டியன் நகர் மாநகராட்சி துவக்கப்பள்ளி, அமுதா மழலையர் பள்ளி, கலிலியோ துளிர் இல்லம் ஆகிய பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சியில், அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் தியாகராஜன் பேசினார். அறிவியல் இயக்க கிளை பொறுப்பாளர்கள் ராம்குமார், ரவிவர்மா ஆகியோர், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top