You are here
Home > இயக்கச் செய்திகள் > திருநந்திக்கரையில் கிராம அறிவியல் திருவிழா

திருநந்திக்கரையில் கிராம அறிவியல் திருவிழா

குமரி மாவட்டம், திருநந்திக்கரையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கிராம அறிவியல் திருவிழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியை பினு ஸ்ரீ குமார் தலைமை வகித்தார். துளிர் இல்ல ஆசிரியர் எஸ்.பி. நிஷாந்த் வரவேற்றார். நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலர் மார்ட்டின் பிரகாசம் பரிசளித்தார். அறிவியல் இயக்க மாநிலச் செயலர் நாராயணசாமி “வான் நோக்குதல்’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.

பாங்க் ஆப் பரோடா வங்கியின் குலசேகரம் கிளை மேலாளர் நம்பி நாராயணன், காசாளர் சசிகுமார், அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலர் சிவஸ்ரீ ரமேஷ், ஒன்றியச் செயலர் புஷ்பராணி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, எப்சிபாய், கிளைத் தலைவர் திவாகரன் பிள்ளை, சதீசன், சுந்தரேசன், திருநந்திக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சுரேஷ் குமார், உறுப்பினர்கள் ஷீலா சந்திரன் தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

அரசுப் பள்ளியில் கடந்த கல்வியாண்டு 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. முதல் வகுப்பு மாணவர்களுக்கு குடைகள் வழங்கப்பட்டன.

பள்ளியில் 28 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியை எல்.வேலம்மா உள்ளிட்டோர் கெளரவிக்கப்பட்டனர். இயக்கத்தின் மாநிலச் செயலர் எம்.சசிகுமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

ஏற்பாடுகளை அறிவியல் ஆண்கள் சுயஉதவிக் குழு, மலர் சுயஉதவிக்குழு, துளிர் இல்லங்கள், கிராம வளர்ச்சிக்கான மக்கள் இயக்கம் ஆகியவை செய்திருந்தன.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top