You are here
Home > இயக்கச் செய்திகள் > அறிவியல் திருவிழா நாளை துவக்கம்

அறிவியல் திருவிழா நாளை துவக்கம்

கோவை: கோவை மாவட்டத்தில் நாளை, அறிவியல் திருவிழா துவங்குகிறது.

கே.பி.ஆர்., கல்லுாரி வளாகத்தில் வரும், 7ம் தேதி வரை நடைபெறும் அறிவியல் திருவிழாவில், அறிவியல் படைப்புகள், விஞ்ஞானிகளுடன் நேருக்கு நேர் கலந்துரையாடல், புத்தக கண்காட்சி, அறிவியல் சார்ந்த மாயாஜால நிகழ்ச்சி, அறிவியல் ஆய்வுகள், பொம்மலாட்டம், நாணயவியல் கண்காட்சி, பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள், சதுரங்க போட்டிகள், குறும்படங்கள் திரையிடல் உள்ளிட்ட, பலதரப்பட்ட அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலம், தமிழ் வழி மாணவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடக்கவுள்ளது. வகுப்புகளின் அடிப்படையில், மாணவர்கள் இரு பிரிவுகளின் கீழ், போட்டிகளில் பங்கேற்க, அனுமதிக்கப்படுவர். வரும், 7ம் தேதி அறிவொளி இயக்கத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சி, தமிழக தொழில்துறை தலைமை செயல் அதிகாரி சங்கர் தலைமையில் நடக்கவுள்ளது.

இக்கண்காட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில், பங்கேற்க விரும்புவோர், 98940-24220, 73735-46023 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் நடராஜ், இத்தகவலை தெரிவித்தார்.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top