You are here
Home > இயக்கச் செய்திகள் > பள்ளிகளில் வங்கிச் சேவை விழிப்புணர்வு இயக்கம்

பள்ளிகளில் வங்கிச் சேவை விழிப்புணர்வு இயக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நபார்டு  வங்கி, அறிவியல் தொழில்நுட்பம், வளர்ச்சி ஆய்வு மையம் சார்பில் வங்கிச் சேவைகள் குறித்த விழிப்புணர்வு பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 21.12.2015 முதல் 7.1.2016 வரை நடைபெறும் விழிப்புணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக பெருங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளி,கோமாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி,ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளிலும் நடைபெற்ற முகாம்களில் மாணவர்களுக்கு வினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டு,வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிகளை நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் எஸ். சோமசுந்தரம், தமிழ்நாடு அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர் வாசுகி ஆகியோர் நடத்தினர். அறிவியல் தொழில்நுட்பம்,வளர்ச்சி ஆய்வு மைய நிர்வாகிகள் எல். பிரபாகரன்,எஸ்.டி. பாலகிருஷ்ணன்,மணவாளன்,வீரமுத்து,உஷா நந்தினி,நீலா, எஸ்.ஏ. கருப்பையா,  மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பி. சுலைமான், நிதிசார் கல்வி மைய ஆலோசகர் முத்து, தொடர்புடைய பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல புதுக்கோட்டை ஒன்றியம், ஆதனக்கோட்டை, கந்தர்வகோட்டை ஒன்றியம் விராலிப்பட்டி, கறம்பக்குடி ஒன்றியம் தீத்தானிப்பட்டி, திருவரங்குளம் ஒன்றியம் கே. ராசியமங்களம், ஆவுடையார்கோவில் ஒன்றியம்,பாண்டிப்பத்திரம், மணமேல்குடி ஒன்றியம் சிருவரை, மற்றும் பொன்னமராவதி ஒன்றியம் அரசமலை ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கான வங்கிச் சேவைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் நாடகம், பாடல்கள் மூலம் விளக்கமளிக்கப்பட்டன. ரிசர்வ் வங்கி வெளியிட்ட துண்டுப் பிரசுரகங்கள், விளக்க கையேடுகள் மக்களின் கவனத்தை கவர்ந்தன.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top