You are here
Home > இயக்கச் செய்திகள் > நீர்நிலைகளைத் தேடி விழிப்புணர்வுப் பயணம்

நீர்நிலைகளைத் தேடி விழிப்புணர்வுப் பயணம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், “காணாமல் போன நீர்நிலைகளைத் தேடி’ என்ற விழிப்புணர்வு மிதிவண்டி பயணம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த இயக்கத்தின் துளிர் இல்ல குழந்தைகள் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு மேள்கொள்ளப்பட்ட இப்பயணம், கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் தொடங்கியது. பேரணியை ஐ லவ் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் ஜனார்த்தனன் மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். இப்பேரணி பேரணி கேப்பர் மலையில் உள்ள கொண்டங்கி ஏரியில் நிறைவுபெற்றது.

இந்த ஏரியை சீரமைக்க வலியுறுத்தி இப்பேரணி நடைபெற்றது.

அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் விக்டர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜான் பிரான்சிஸ் ரேபெல்லோ, கன்யா, வாலிபர் சங்கச் செயலர் தமிழ்மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நன்றி:தினமணி நாளிதழ்

Leave a Reply

Top