You are here
Home > இயக்கச் செய்திகள் > அறிவியல் இயக்க கிளை அய்யலூரில் துவக்கம்

அறிவியல் இயக்க கிளை அய்யலூரில் துவக்கம்

வடமதுரை:அய்யலூர் ரஞ்சித் மழலையர் தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை துவக்க விழா நடந்தது. மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் வீரய்யா வரவேற்றார்.

மாநில துணைத்தலைவர் கவனகன், மாவட்ட இணை செயலாளர் ராசு, முன்னாள் செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் அறிவியல் இயக்க பணி, எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினர். மாணவர்களுக்கு அறிவியல் விளக்க நிகழ்ச்சிகள் செயல் விளக்கத்துடன் நடத்தப்பட்டது.

விழாவில் அய்யலூர் கிளை தலைவராக முனியாண்டி, துணைத் தலைவராக மீனா, செயலாளராக தனபால், பொருளாளராக பெருமாள் தேர்வு செய்யப்பட்டனர்.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top